‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ‘டீப் பேக்’ தொழில்நுட்பம் மக்களிடையே எளிதாக குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடும். உதாரணத்திற்கு எனது குரல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம். இந்த ‘டீப் பேக்’ வீடியோ அல்லது ஆடியோ ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய நடைமுறைகளை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடியது, செய்யக்கூடாததை நாம் வரையறுக்க வேண்டும். இதுபோன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பம் போதிய பயிற்சி இல்லாத நபர்களிடம் சென்றடையும் போது, அதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது’ என்றார். ெதாடர்ந்து பில் கேட்ஸ் பேசுகையில், ‘ஏஐ தொழில்நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இதில் பல்வேறு சவால்கள் இருந்தாலும், ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கக்கூடியது’ என்றார்.

The post ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: