மலைப் பகுதி மகளிருக்கும் விடியல் பயணத் திட்டம் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர்த் உரிமைத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்ட அரசாணை: பட்ஜெட் அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் விடியல் பயணம் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் 100சதவீத மலைப் பகுதிகள் மற்றும் பகுதி மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தி அரசு ஆணையிடுகிறது. இதற்கான இழப்பீட்டு தொகையை ஒரு பயனாளிக்கு ரூ.22 வீதம் சம்மந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கவும் அரசு ஆணையிடுகிறது.

 

The post மலைப் பகுதி மகளிருக்கும் விடியல் பயணத் திட்டம் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: