மத்திய சதுக்கத்திட்டத்தின் கீழ் ₹9.75 கோடி செலவில் புதிய சுரங்க நடைபாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ₹9.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுரங்க நடைபாதையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி அருகிலும், ஈவினிங் பஜார் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கேயும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் 9 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக சுரங்க நடைபாதை கட்டப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த சுரங்க நடைபாதையில் 2 நகரும் படிக்கட்டுக்கள் உள்ளன. ஒன்று ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி பகுதியிலும், மற்றொன்று பைபிள் சொசைட்டி மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகப் பகுதியிலும் அமைந்துள்ளன. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன், ஒளியூட்டப்பட்ட பெயர்பலகைகள் சுரங்க நடைப்பாதையின் உட்பகுதியிலும், வெளிபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மத்திய சதுக்கத்திட்டத்தின் கீழ் ₹9.75 கோடி செலவில் புதிய சுரங்க நடைபாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: