உத்தரகாண்ட்டில் 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து!

சென்னை: உத்தரகாண்ட்டில் 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதை மீட்புப் பணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மட்டுமின்றி ராணுவம், விமானப்படை அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட்டில் 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள X தள பதிவில்; உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டெடுத்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய இராணுவம், வெளிநாட்டு நிபுணர் குழு, எலி துளை தோண்டும் நிபுணர்கள் மற்றும் மன உறுதியுடன் சுரங்கத்திற்குள் 17 நாட்கள் இருந்ததோடு, மீட்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதனை வெற்றி பெறச் செய்ய உதவிய 41 தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். இந்த மீட்புப் பணியை ஒருங்கிணைத்து, தேவையான அனைத்து உதவிகளையும் அவ்வப்போது அளித்து, இதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. என்று பதிவிட்டுள்ளார்.

 

The post உத்தரகாண்ட்டில் 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: