மேற்கு மாம்பலத்தில் தண்ணீர் வடிந்து வருகிறது: 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்கியது ஏன்? என்பது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

6,000 கனஅடி நீர் திறந்தபோதும் பாதிப்பில்லை:

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் 6,000 கனஅடி நீர் திறந்தபோதும் குடிசை பகுதி மக்களுக்கு பாதிப்பில்லை. செம்பரம்பாக்கத்தில் நீர்த்திறப்பு 6,000 கன அடியிலிருந்து 4,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அடையாறு கரையோரம் உள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழை நீர் வேகமாக வடிந்து வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மேற்கு மாம்பலத்தில் தண்ணீர் வடிந்து வருகிறது:

மாம்பலம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. மாம்பலம் கால்வாயில் பிரச்சனையை சரிசெய்வதற்காகவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைப்பால் மேற்கு மாம்பலத்தில் மழைநீர் விரைவில் வடியும்.

பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்து, உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் வரவுள்ள கனமழையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்:

பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியை 24 மணி நேரமும் தொடர முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். நோய்த்தொற்று ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post மேற்கு மாம்பலத்தில் தண்ணீர் வடிந்து வருகிறது: 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: