கோவை மாவட்டம் வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது: போலீஸ் விசாரணை

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசித்தூரை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. இந்தநிலையில் செப்.20ம் தேதி காலை பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இந்த செயலில் ஈடுபட்டது யார், எதற்காக ஈடுபட்டனர் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

The post கோவை மாவட்டம் வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: