குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். 02.10.2022 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டத்தினை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூ.5000/- ஆக உயர்த்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், 02.10.2022 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 12.10.2022-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.