சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீர் பிரச்னை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம் தண்ணீரை தந்துகொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறக்க விட வேண்டும்.
கர்நாடகாவுக்கு நாளையோடு உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிகிறது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் போராட்டம்”:
பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவது குறித்து பேசும்போது, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மை என்னவாவது? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக உணர்ந்துள்ளது:
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக தற்போது உணர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியில் யார் இருக்க வேண்டும் என்பதை அக்கட்சி தலைவர்கள் உணர வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
The post காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.