வேலூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு


வேலூர்: இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (செப்.26) ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு தொடக்க பள்ளி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post வேலூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: