வீட்டு சிலிண்டரின் விலை மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,937க்கு விற்பனை

சேலம்: நாடு முழுவதும் இம்மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.84.50 குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. திரிபுரா, நாகலாந்து, மேகலாயா மாநில தேர்தல் முடிந்த நிலையில் கடந்த மார்ச் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 அதிகரித்தனர். இதன் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.1100ஐ தாண்டியது. இதேபோல், கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிக்கப்பட்டு, சென்னையில் ரூ.2,268க்கு சிலிண்டர் விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் வர்த்தக சிலிண்டர் விலை ஏப்ரல் மாதத்தில் ரூ.2,268ல் இருந்து ரூ.75.50 குறைக்கப்பட்டு ரூ.2,192.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து ரூ.2,024க்கு விற்பனையானது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான புதிய விலையை இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. அதேவேளையில், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.84.50 குறைக்கப்பட்டு,ரூ.1,937-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.1,118.50க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது

The post வீட்டு சிலிண்டரின் விலை மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,937க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: