கள்ளக்குறிச்சி, மார்ச் 27: கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). விவசாயி. இவரது குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்ததாகவும், கூட்டுப்பட்டாவை பிரித்து பட்டா பெயர் மாற்றம் செய்திட வேண்டி வெங்கடேசன் அதே கிராமத்தில் உள்ள விஏஓ பெரியாபிள்ளையிடம் முறையிட்டுள்ளார். அப்போது பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து விவசாயி வெங்கடேசன், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் முறையிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியது போன்று விஏஓவிடம் பணம் கொடுக்க கடந்த வாரம் வெங்கடேசன் முயன்ற போது, அச்சத்தில் பணத்தை வாங்கவில்லை. பின்னர் கடந்த 24ம் தேதி விஏஓ, வெங்கடேசனை தொடர்பு கொண்டு மீண்டும் பணம் கேட்டுள்ளார்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது
