சேத்தியாத்தோப்பு, மார்ச் 26: சேத்தியாத்தோப்பு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்ததது. படுமோசமாக சிதிலமடைந்த நிலையில் விடுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் தங்கி படித்து வந்ததை சுட்டிகாட்டி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக விடுதியை காலி செய்து மாணவர்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டும் பணியை விரைந்து துவங்க வேண்டும்
