தைபூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழநாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம்..!!

சென்னை: தைபூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களையொட்டி நாளை, நாளை மறுநாள், பிப்.1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, சேலம், தூத்துக்குடி, கோவை, ஈரோடு, திருப்பூருக்கு பேருந்தகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 360 பேருந்துகளும், நாளை மறுநாள் 485 பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து நாளை, நாளை மறுநாள் தல 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து நாளை, நாளை மறுநாள் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பிப். 1ல் சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: