சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் அமையவுள்ளது.
