வாக்கு அளிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நடமாடும் வாக்குப்பதிவு இயந்திர வாகன பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

 

திருவள்ளூர்: திருவள்ளூரில் வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு குறித்து நடமாடும் வாக்குப்பதிவு இயந்திர வாகன பேரணியை, கலெக்டர் பிரதாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், வாக்காளர்களிடையே வாக்கு அளிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடமாடும் வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்ட வாகன பேரணி நடைபெற்றது.

இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் தலைமை தாங்கி, வாக்குப்பதிவு இயந்திரம் வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: