கோவை, ஜன. 26: கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (41). கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்த இவர், நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹரிஸ், பிஎஸ்சி படித்தவர், சொந்த தொழில் செய்து நஷ்டம் அடைந்தார்.
மேலும் இவருக்கு திருமணம் நடக்காமல் காலதாமமாகி வந்தது. அக்கா மட்டுமே இவருக்கு ஆதரவாக இருந்து வந்தார். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த இவர், தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
