திண்டுக்கல், ஜன. 28: திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி சுப்புலட்சுமி (65), மகள்கள் பஞ்சவர்ணம் (35), கருத்தம்மாள் (28). இவர்கள் 3 பேரும் கடந்த 24ம் தேதி வீட்டின் முன்பாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக அவர்களை ஒருகும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் காயமடைந்த அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ அங்கமுத்து ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே ஊரைச்சேர்ந்த விஜய் (24), ஆறுமுகம் (50), முருகேசன் (56), மணிராஜன் (45) ஆகியோர் சேர்ந்து, அவர்களை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகம், முருகேசன், மணிராஜன் ஆகியோரை நேற்று கைது ெசய்த போலீசார், தலைமறைவான விஜய் என்பவரைதேடி வருகின்றனர்.
