மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

ராமேஸ்வரம், ஜன. 28: ராமேஸ்வரத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பர்வதவர்த்தினி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கம்மாள் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் 177 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் கே.இ.நாசர்கான், துணைத்தலைவர் தெட்சிணமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள், கோயில் பேஷ்கார்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: