ஒன்றிய அரசை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம்

காரைக்குடி, ஜன. 28: காரைக்குடியில் அனைத்து வங்கி, தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு, சிவகங்கை மாவட்ட அமைப்பின் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. காரைக்குடி கல்லூரி சாலையில் நடந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.பி.இ.ஏ, மாவட்ட பொதுச் செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமை ஏற்றார். எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் சங்க வட்டார செயலர் செந்தில், ஐ.ஓ.பி., அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு செயலர் மோகன்குமார் மற்றும் எஸ்.பி.ஐ., ஜ்குமார் வரவேற்றனர். ஏ.ஐ.பி.இ.ஏ, மாவட்டதலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். 5 நாள் வேலை முறை திட்டத்தை அமல்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories: