மயிலாடுதுறையில் வீட்டில் புகுந்த சாரைபாம்பை தீயணைப்பு போலீசார் பிடித்தனர்

மயிலாடுதுறை, ஜன.26: மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவர் சிஆர்சியில் பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டின் கூறை மீது பாம்பு இருப்பதை கண்டார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 7அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து எடுத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு படை வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

 

Related Stories: