தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் -ஐகோர்ட்டில் அரசு உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. மலைப்பகுதிகளில் மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்காக ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்துவிட்டு பிறகு காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில அந்த 10 ரூபாயை திருப்பி அளிப்பது என்ற ஒரு காலி மது பாட்டில்களை திரும்ப பெறக்கூடிய திட்டத்தை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு இந்த திட்டத்தை விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ் குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை விசாரித்த நீதிபதி 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் 3 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் இனி அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: