குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம்

சிவகங்கை, ஜன.24: சிவகங்கை மாவட்டத்தில் ஜன.26 குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வருகிற 26ம்தேதி குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 444 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் அவ்வூராட்சியில் குடியரசு தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம்பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் ஆகிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி கிராமமக்கள் கல்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: