×

காஷ்மீரில் கொட்டித்தீர்க்கும் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து; சுற்றுலா பயணிகள் தவிப்பு

 

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பெய்து வரும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவால் வான் மற்றும் சாலை வழி போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் சீரற்ற வானிலை காரணமாக போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக சுமார் 17 விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓடுதளத்தில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இண்டிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு செல்போன் வழியாக அவ்வப்போது தகவல்களை வழங்கி வருகின்றன. விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பயணிகள் தங்களின் பயணத்தை உறுதி செய்த பின்னரே விமான நிலையத்திற்கு வர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். மறுபுறம், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதான சாலையான ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பனிச்சறுக்கல் காரணமாக மூடப்பட்டுள்ளது.

இது தவிர முகல் சாலை, சோன்மார்க் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் பனி படர்ந்துள்ளதால் பனிஹால் முதல் பாரமுல்லா வரையிலான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் 26ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால், வார இறுதி வரை இந்த கடும் பனிப்பொழிவு நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : Kashmir ,Srinagar ,Kashmir Valley ,
× RELATED இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்புயல்...