×

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இசையமைப்பாளர் ரூ.40 லட்சம் மோசடி: மகாராஷ்டிரா போலீசார் விசாரணை

 

சாங்லி: சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் ஏமாற்றியதாக இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் காதலித்து வந்த நிலையில், 2025ம் ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த இவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி பகுதியைச் சேர்ந்த விஞ்யான் மானே என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘ஸ்மிருதி மந்தனாவின் தந்தை மூலமாக அறிமுகமான பலாஷ் முச்சல், 2023ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி நசாரியா என்ற படத்தில் முதலீடு செய்தால் ரூ.25 லட்சத்திற்கு ரூ.12 லட்சம் லாபம் தருவதாகவும், ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்; இதனை நம்பி 2025ம் ஆண்டு, மார்ச் மாதம் வரை பல்வேறு தவணைகளாக கூகுள் பே மற்றும் ரொக்கமாக மொத்தம் ரூ.40 லட்சம் கொடுத்தேன்; ஆனால் படம் வெளியாகாத நிலையில் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது தராமல் அலைக்கழிப்பதுடன், எனது செல்போன் எண்ணையும் பிளாக் செய்து விட்டார்’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Tags : Maharashtra ,Sangli ,Palash Muchal ,Smriti Mandhana ,
× RELATED வன்முறை வழக்கில் தலைமறைவாக உள்ள...