திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் குருவாயூர் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள 1,39,895 சவரன் தங்கம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றுள்ளார். இன்றைய நிலையில் குருவாயூர் தேவஸ்தானத்திடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1,640 கோடி ஆகும்.
