ஒட்டன்சத்திரத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம், ஜன.23: ஒட்டன்சத்திரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாமிநாதன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அனைவரும் இணைந்து செயல்பட்டு, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் ரஹ்மான்சேட், முருகேசன், எத்திராஜ், வட்டார தலைவர்கள் கருப்புச்சாமி, அசரப்அலி, பாலு, காளிமுத்து, சுரேஷ்குமார் நகர பொறுப்பாளர் மாரிமுத்து கண்ணன், தலைமை கழக பேச்சாளர் சிந்தை கருப்புச்சாமி, இளைஞர் காங்கிரஸ் சேக் அப்துல்லா, யாசிர் பிச்சைமுத்து, நாச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர்மன்ற உறுப்பினர் முகமது மீரான் நன்றி கூறினார்.

 

Related Stories: