டூவீலர் மீது பஸ் மோதி வாலிபர் பலி

திண்டுக்கல் ஜன.23: திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டி அருணாசலம் நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் கார்த்திக் (41).

இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை இவர் தனது இருசக்கர வாகனத்தில், தாடிக்கொம்பு ரோடு, அஞ்சலி பைபாஸ் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து, இவரது டூவீலர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரில், தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: