திருக்கடையூர் பகுதியில் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்குதல்

தரங்கம்பாடி, ஜன. 23:மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் பகுதியில் சம்பா சாகுபடி நெற்கதிர்களில் புகையான் தாக்குதல் பாதிப்பு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருக்கடையூர், சீவகசிந்தாமணி, சரபோஜிராஜபுரம், அன்னப்பன்பேட்டை, மருதம்பள்ளம், டிமணல்மேடு, நட்சத்திரமாலை, காடுவெட்டி, ராவணன்கோட்டம், கண்ணங்குடி, கிள்ளியூர், பிள்ளைபெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை மற்றும் கடும் பனி காரணமாக நெற்கதிர்களை புகையான் பூச்சி தாக்கி உள்ளது. அதனால் நெற்கதிர்கள் பதராக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ராமமூர்த்தி என்பவர் கூறியதாவது, திருக்கடையூர் பகுதியில் சம்பா சாகுபடி செய்யபட்ட பயிர்களில் புகையான் தாக்குதல் காரணமாக நெற்கதிர்கள் எல்லாம் பதராகி போயுள்ளது.

இதனை அதிக அளவில் மருந்துகளை அடிக்க வேண்டி இருப்பதால் வேளாண்துறை விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சி மருந்துகளை வழங்க வேண்டும். பதராகி போன பயிர்களை கணக்கெடுத்து வேளாண்துறை உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

Related Stories: