கன்னியாகுமரி, ஜன.23: கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றம் வேல் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 1ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து விழா நடக்கிறது. விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோம், 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம், 7 மணிக்கு மங்கள பூர்ணாஹுதி , 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. 10.45 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
2ம் திருவிழாவான நாளை முதல் 9ம் திருவிழா வான 31ம் தேதி வரை தினமும் காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, 10.15 மணிக்கு யாகசாலை தீபாராதனை, 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. 10ம் திருவிழாவான அடுத்தமாதம் (பிப்ரவரி) 1ம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, 10 மணிக்கு திரவியாஹூதி, 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு வேல்முருகனுக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு சமபந்தி விருந்து, 6 மணிக்கு உற்சவமூர்த்தியுடன் பக்தர்கள் கிரிவலம் வருதல், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை தெப்பக்குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகிறார்கள்.
