நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம் 27ம்தேதி நடக்கிறது

நாகர்கோவில், ஜன.23: வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (நாகர்கோவில்) மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் முகாம் ( நிதி ஆப்கே நிகத் 2.0) மற்றும் சுவிதா சமாகம் என்னும் குறைதீர் முகாம் வருகிற 27.1.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் கீழ வண்ணான்விளையில் உள்ள இவான்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இன்னும் 3 மாதங்களில் 58 வயதை அடையும் உறுப்பினர்கள் ஓய்வூதிய ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பான சந்தேகங்களை வைப்பு நிதி உங்கள் அருகில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிந்து கொள்ளலாம். யுஏஎன் எப்படி செயல்படுத்துவது உள்ளிட்ட இதன் சேவைகள் தொடர்பாக தெரிந்து கொள்ளலாம். திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ள முடியும். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுப்பிரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: