கூடங்குளம்,ஜன.23: ராதாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெற்கு கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மீதுள்ள குற்ற வழக்கு காரணமாக ராதாபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜரான முருகன், மது அருந்தி விட்டு நீதிமன்ற வளாகத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். ராதாபுரம் குற்றவியல் நீதிபதி குபேர சுந்தர் கண்டித்தும் தொடர்ந்து முருகன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தார். இதனால் நீதிபதி, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.இது குறித்து ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் சகாயராவின் ஷாலு அளித்த புகாரின் பேரில் நீதிபதி உத்தரவை மீறி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்த குற்றத்திற்காக முருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
