ரயில் பாதை திட்டப்பணிக்கு தூத்துக்குடி ஒன்றாம் கேட் ஜன.25 முதல் 28 வரை மூடல்

தூத்துக்குடி, ஜன. 23: தூத்துக்குடியில் ரயில் பாதை திட்டப் பணிக்காக 1வது ரயில்வே கேட், வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இரட்டை ரயில் பாதை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வரும் 25ம் தேதி இரவு 9 மணி முதல் 28ம் தேதி மாலை 6 மணி வரை 1வது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்திற்கு மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: