ஆறுமுகநேரி, ஜன. 23: முக்காணி அருகே பைக் திருடிய இளஞ்சிறாரை போலீசார் கைது செய்தனர். முக்காணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பார்த்திபன்(33). விவசாயியான இவர், கடந்த 19ம் தேதி மதியம் திருச்செந்தூர் -தூத்துக்குடி சாலை முக்காணி அடுத்த கொடுங்கனி விலக்கு அருகே உள்ள வயலுக்கு பைக்கில் சென்றுள்ளார். அங்கு பைக்கை நிறுத்தி விட்டு வயலுக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பார்த்திபன், ஆத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் பைக்கை திருடிய தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த இளஞ்சிறாரை கைது செய்து அவரிடமிருந்து பைக்கையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
