மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம்

திண்டுக்கல், ஜன. 22: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மீன் வளம், மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்பு தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானிய திட்டங்களை பெற்று மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள மீன் வள விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தை பெற்று பயன்பெறலாம். இத்திட்டம் குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற திண்டுக்கல் நேருஜி நகரில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேலை நாட்களில் அலுவலர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 

Related Stories: