- டிரம்ப்
- டாவோஸ்
- வாஷிங்டன்
- கிரீன்லாந்து
- அதிபர் டிரம்ப்
- உலக பொருளாதார மன்றம்
- டாவோஸ், சுவிட்சர்லாந்து
- ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்…
வாஷிங்டன்: கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா-ஐரோப்பா இடையேயான உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் அதிபர் டிரம்ப் நேற்றிரவு உரையாற்ற இருந்தார். இதற்காக, ஆண்ட்ரூஸ் கூட்டு ராணுவ தளத்தில் ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் டிரம்ப் நேற்று காலை புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் எலக்ட்ரிகல் கோளாறு இருப்பதை அறிந்த விமானி உடனடியாக அதை ராணுவ தளத்திற்கு திரும்பினார்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் டிரம்ப் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வேறொரு ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் டிரம்ப் புறப்பட்டு சென்றார். அமெரிக்க அதிபரின் விமான பயணத்திற்காக 2 ஏர்போர்ஸ் ஒன் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுமே 30 ஆண்டுகள் பழமையானவை. இவற்றை மாற்றி போயிங் நிறுவனத்தின் 747-8 ரக புதிய விமானங்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனாலும் அவை 2028ம் ஆண்டில் தான் தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
