ஜெருசலேம்: காசா போர் நிறுத்த திட்டத்தை கண்காணிக்கும் உலக தலைவர்களின் அமைப்பாக காசா அமைதி வாரியம் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வாரியத்தில் சேர பல்வேறு நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். முதலில் காசாவுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட இந்த குழு விரைவில் உலகளாவிய போர்களுக்கு தீர்வு காணும் என டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்த வாரியத்திற்கு முதலில் இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்ப் வாரியத்தில் சேர நேற்று ஒப்புதல் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முக்கிய எதிரிகளால் ஒன்றான துருக்கிக்கும் இந்த வாரியத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் இஸ்ரேலின் வலதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுவரையிலும் டிரம்பின் வாரியத்தில் ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, வியட்நாம், பெலாரஸ், ஹங்கேரி, கஜகஸ்தான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.
* பாகிஸ்தான் சம்மதம்
பதற்றமான பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை ஆதரிக்க, காசா அமைதி வாரியத்தில் சேர அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
