அஞ்சுகிராமம், ஜன.22: மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பி.டி. செல்வகுமார் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். முதல்வர் தீப செல்வி வரவேற்றார். மழலையர் பிரிவு மற்றும் 1,2ம் வகுப்பு, 3,4,5ம் வகுப்பு, 6,7,8ம் வகுப்பு 9,10,11,12ம் வகுப்பு தனித்தனி பிரிவுகளாக இணைந்து ராபர்ட் எய்ன்ஸ்டீன், கிறிஸ்டோபர் கொலம்பஸ், மகாத்மா காந்தி, லியானார்டோ டாவின்சி ஆகிய அணிகளாகப் பிரிந்து கண்காட்சியில் போட்டியிட்டனர்.
ரோகிணி கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் பெனிலா, டாக்டர் பிரேம் சங்கர், விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஜெயலட்சுமி, டாக்டர் ஆரோக்கிய ஜெய யாஸ்மி, வேளாங்கண்ணி கல்லூரி ஸ்வர்ணா, டாக்டர் சிவகுரு மணிகண்டன், டாக்டர் எஸ் எம் ஸ்வாமி, ஜெயபிரபா, டாக்டர் சண்முகப்பிரியா, வாணி ஆசிரியை சிந்தியா ஆகியோரும் நடுவர்களாக கலந்து கொண்டனர். கண்காட்சியில் பழங்கால மக்களின் வாழ்வியல் சூழல், ரோபோக்களின் செயல் திறன், வானில் உலவும் கோள்களை வகுப்பறைக்குள் கொண்டு வந்த விதம் அனைவரையும் கவர்ந்தன. சுமார் 900க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். கண்காட்சியில் கலந்து சிறப்பித்த மாணவ மாணவியரை தாளாளர் தில்லை செல்வம் பாராட்டினார். பெற்றோர் கண்காட்சி அரங்கை பார்வையிட்டு மாணவர்களின் திறமையை பாராட்டினர்.
