மேலஅருணாசலபுரத்தில் ரூ.10 லட்சத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணி

விளாத்திகுளம், ஜன. 22: புதூர் அருகே உள்ள மேலஅருணாசலபுரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். புதூர் ஊராட்சி ஒன்றியம் மேலஅருணாசலபுரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டித் தர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள், மார்க்கண்டேயன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து புதிய கலையரங்கம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பணியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதூர் பிடிஓக்கள் ராமராஜன், தினகரன், புதூர் ஒன்றிய செயலாளர்கள்(மத்திய) ராதாகிருஷ்ணன், (கிழக்கு) செல்வராஜ், விளாத்திகுளம்(தெற்கு) இம்மானுவேல், ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய விவசாய அணி மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: