பப்பாளியில் அழுகல் நோயை தடுக்கலாம்

சின்னமனூர், ஜன. 21: பப்பாளியில் உச்சி, வேர் அழுகல் நோயை தடுக்கும் முறைகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: பப்பாளியில் உச்சி, வேர் பகுதியில் அழுகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது. அதிகப்படியான மண் வெப்பநிலை அல்லது ஈரப்பதம் இருப்பது, பாதிக்கப்பட்ட விதை- செடிகளை நடவு செய்வது, தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி பயிரிடுவது போன்றவற்றால் நோய் தாக்குதல் ஏற்படும். தழைச்சத்து உர பயன்பாட்டினை குறைத்து நுண்ணூட்டசத்துகளின் பயன் பாட்டை அதிகப்படுத்துவதால் பயிர்கள் எதிர்ப்பு சக்தி பெறும். வயல்களை சுத்தமாக பராமரித்தால் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: