செம்போடையில் மாவட்ட அளவிலான ஆண்டு விளையாட்டு போட்டி

வேதாரண்யம், ஜன.21: செம்போடையில் இளம்புயல் விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா செம்போடை ஊராட்சியில் இளம்புயல் விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான 26ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், ஓய்வு பெற்ற வேலைவாய்ப்பு அலுவலர் காசிநாதன், நாகை மாவட்ட கராத்தே சங்க செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் துவக்கி வைத்தார். விளையாட்டு விழாவில் ரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன், ஓய்வுபெற்ற உதவி கருவூல அலுவலர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிவேல், தேவிகா உள்ளிட்ட கிராம மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் மினி மாரத்தான் போட்டி, சிறுவர்கள், பெரியவர்களுக்கான கபடி போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், இசை நாற்காலி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் ஜெயராமன் நன்றி கூறினார்.

Related Stories: