ராஜாக்கமங்கலம் ஒன்றிய சேவா பாரதி சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா

 

ஈத்தாமொழி, ஜன. 20: ராஜாக்கமங்கலம் ஒன்றிய சேவா பாரதி சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா ஈத்தாமொழியில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஒன்றிய சேவா பாரதி தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியின் தொடக்கமாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, அவரது தேசப்பற்று, இளைஞர்களுக்கான சிந்தனைகள் குறித்து பேசப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய சேவா பாரதி செயலாளர் பாலகிருஷ்ணன் வேலையா, ஆடராவிளை சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற அமைப்பாளர் ராஜகுமார், பாஜக கூட்டுறவு பிரிவு ராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவர் ஆதிசுவாமி, எ.வி.டி. கல்வியியல் கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன், ரமேஷ் கண்ணன், சுயம்புலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: