ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் அஜித்குமார் (25). சென்னையில் உள்ள ஒரு கூரியர் கம்பெனி குடோனில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அஜித்குமார், நேற்றுமுன்தினம் இரவு பாப்பாக்குடியில் உள்ள ஒரு மெடிக்கலில் மாத்திரை வாங்குவதற்காக பைக்கில் சென்றார். அப்போது எதிரே கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அறந்தாங்கி மரியாஸ்பென் மகன் டோனிதீபக் (24), மார்டின் மகன் தீபக் வெர்ஜின் (24) ஆகியோர் பைக்கில் பாப்பாக்குடி வந்தனர்.கண்இமைக்கும் நேரத்தில் 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பைக்குகள் மோதல் சென்னை வாலிபர் உட்பட 3 பேர் பலி
- சென்னை
- செந்தில்குமார்
- அஜித் குமார்
- பாப்பாகுடி மெயின் ரோடு தெரு
- மீன் சுருட்டி
- அரியலூர் மாவட்டம்
- பொங்கல்
