இந்தியாவின் ரூ.544 கோடி உதவியுடன் காங்கேசன் துறைமுகம் புனரமைப்பு: இலங்கை அதிபர் அனுர குமார அறிவிப்பு

 

கொழும்பு: இலங்கையின் காங்கேசன் துறைமுகம் இந்தியாவின் ரூ.544கோடி நிதியுதவியுடன் புனரமைக்கப்படும் என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்பாணத்திற்கு அருகே உள்ள சாவகச்சேரியில் ஒரு அழகான வாழ்க்கை 2026 என்ற தேசிய வீடு திட்டத்தின் தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அதிபர் அனுர குமார திசாநாயக்க, போரின்போது ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

இருப்பினும் நீண்ட காலம் கடந்தபோதிலும் அந்த வீடுகள் முழுமையாக கட்டப்படவிலலை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்த மக்கள் போரின்போது இடம்பெயர்ந்தனர் என்பதை நான் அறிவேன். போருக்குப் பின்னரும் அவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு குடும்பம் நீண்ட காலம் வீடு இன்றி வாழ்வது நியாயமல்ல. போரினால் இடம்பெயர்ந்தவர்களின் வீடு பிரச்னைகள் எங்களது ஆட்சிக்காலத்தில் தீர்த்து வைக்கப்படும்.

அழகிய கடற்கரையையும, பல சுற்றுலா அம்சங்களையும் கொண்டுள்ள யாழ்பாண மாவட்டம் சுற்றுலா அபிவிருத்திக்கு அதிக சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து அதனை புனரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும். இதற்காக ரூ.544கோடி நிதியுதவி வழங்குவதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது” என்றார்.

Related Stories: