பிரதமர் மார்க் கார்னி பெய்ஜிங் பயணம் அமெரிக்காவிடமிருந்து விலக கனடாவுக்கு சீனா வலியுறுத்தல்

 

பெய்ஜிங்: அமெரிக்காவின் அண்டை நாடாகவும் அதன் மிகுந்த ஆதரவு நாடாகவும் கனடா இருந்து வருகிறது. ஆனால் அதிபர் டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபரான பிறகு இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடா மீது டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதித்ததுடன், அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை மிரட்டி வருகிறார். இந்நிலையில், கனடா பிரதமர் கார்னி நேற்று சீனாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். இந்த சூழலில் சீன அரசு ஊடகங்கள், ‘இனியாவது கனடா அமெரிக்காவின் செல்வாக்கில் இருந்து விலகி, உத்திசார் சுயாட்சி வெளியுறவுக் கொள்கையை பாதையை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளன.

Related Stories: