தங்க கடத்தலில் சிக்கி தப்பமுயன்ற 2 இலங்கையர் கைது

 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் துறைமுக கடற்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு செல்ல பதுங்கி இருந்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (47), அம்பாறை மாவட்டம் முகமது ஜெஸில் (45) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுதியில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேரும் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: