மீனம்பாக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக அதிமுக கட்சி நிர்வாகிகள், சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்து, எடப்பாடி பழனிசாமிக்கு, பூங்கொத்துகள், சால்வைகள், மற்றும் வாழைப்பழங்கள் கொடுத்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது சென்னை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. தமிழர்களின் திருநாள் இந்த தை பொங்கல். உலகெங்கும் இருக்கின்ற தமிழர்களுக்கு, எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் என்று கூறிவிட்டு, வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல், விமான நிலையத்திற்கு சென்றார்.
