உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது: பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பேட்டி

ராஜ்கோட்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் தொடர் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரில் வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி இன்று ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆடி வருகிறது.

இந்த போட்டிகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் அளி்த்தபேட்டி: ஆயுஸ் பதோனி உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இந்தியா அணிக்காகவும் தொடர்ந்து ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் நம்மால் 5 பவுலர்களை மட்டும் வைத்துக் கொண்டு போட்டிக்கு செல்ல முடியாது. அப்படி செல்லும் போது வாஷிங்டன் சுந்தர் போல யாராவது காயமடைந்து இருந்தால் என்ன செய்வது?.

எனவே நமக்கு நடுவில் 4,5 ஓவர்கள் வீசுவதற்கு ஆள் தேவை. எனவே தான் நாங்கள் இந்த இளம் வீரரை தேர்வு செய்து இருக்கிறோம். ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இருவரும் ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் விளையாடுவதால் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என மிகவும் விரும்புகிறார்கள். மேலும் அவர்களது அனுபவத்தைக் கொண்டு தென்ஆப்ரிக்காவுக்கு சென்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விவாதித்து வருகிறோம்.

Related Stories: