காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்

விகேபுரம் : நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தினமும் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் பக்தர்கள் அவற்றை ஆங்காங்கே வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி வனவிலங்களுக்கும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

எனவே வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் கோயில் மற்றும் ஆற்றுப்பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் காரையாறு ஆற்றங்கரை பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது.

இதில் பசுமை தோழர் அறக்கட்டளை மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்கள் கோயில் மற்றும் ஆற்றுப்பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக், துணி கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றின் தூய்மையையும், இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: