இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை

 

புதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் டெல்லியில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் இரட்டையர் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ட்ரீஷா ஜோலி, காயத்ரி கோபிசந்த் இணை, தாய்லாந்தை சேர்ந்த சுகிதா சுவாசாய், ஜாங்சதாபோர்ன்பர்ன் இணையுடன் மோதியது.

இப்போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய இணை, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த 2வது செட்டில் வேகத்தை அதிகரித்த இந்திய வீராங்கனைகள், 21-11 என்ற புள்ளிக்கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர்கள் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

* ஆயுஷை வென்ற சென்

இந்தியா ஓபன் ஆடவர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டி ஒன்றில் இந்திய வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய லக்சயா சென், 21-12, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: