ஹோபார்ட் மகளிர் டென்னிஸ்: மற்றொரு போட்டியில் வாங் அமர்க்களம்: மிரட்டிய இவாவிடம் சரண்டரான ஜேனிஸ்

 

ஹோபார்ட்: ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக், 2-0 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஹோபார்ட் இன்டர்நேஷனல் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் (18), இந்தோனேஷியா வீராங்கனை ஜேனிஸ் ஜென் (23) மோதினர்.

துவக்கம் முதல் புலியாய் சீறிப்பாய்ந்து ஆடிய இவா ஜோவிக் முன், எதுவும் செய்ய முடியாமல் சரண்டர் ஆனார் ஜேனிஸ். அதனால், முதல் செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுத்தராமல் அற்புத வெற்றி கண்ட இவா, 2வது செட்டில் ஒரு புள்ளியை மட்டுமே விட்டுத் தந்தார். அந்த செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை வாங் ஜிங்யு, ஆஸ்திரேலியா வீராங்கனை டாலியா கிப்சன் மோதினர். ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகள் குவித்த வாங், முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அவர் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: